Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.வை விட்டு வெளியேறுகிறதா காங்கிரஸ்? டெல்லி விரைந்த வீரப்பமொய்லி.!

திமுக, காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

தி.மு.க.வை விட்டு வெளியேறுகிறதா காங்கிரஸ்? டெல்லி விரைந்த வீரப்பமொய்லி.!

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2021 9:46 AM GMT

திமுக, காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தனது கட்சியினர் மத்தியில் விம்மி, விம்மி அழுதார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இவ்வளவு குறைந்தளவு தொகுதிகளை பெறுவது கட்சியின் செல்வாக்கை பாதிக்கும் என்று கருதியதால் அனைத்து நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்பதற்காக செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

இதில் வீரப்ப மொய்லி, தினேஷ் குண்டு ராவ், சஞ்சய்தத், ஸ்ரீவல்ல பிரசாத், பல்லம் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது திமுக குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது தேசிய கட்சி என்ற மரியாதை கூட தரவில்லை. மிகவும் கீழ்த்தரமாக நடத்தினர் என்று கூட்டத்தினர் மத்தியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விம்மி, விம்மி அழுதார்.




இவரது அழுகை காங்கிரசார் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. அப்போது திமுகவில் இருக்கலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்று நிர்வாகிகள் மத்தியில் கருத்துக்களை கேட்டனர். அந்த கூட்டத்தில் அதிகமான தொகுதிகள் ஒதுக்கினால் திமுகவில் இருக்கலாம். இல்லை என்றால் வெளியேறலாம் என்று நிர்வாகிகள் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்து, திமுகவின் முடிவுகள் குறித்த விபரங்களுடன் வீரப்பமொய்லி டெல்லி விரைந்துள்ளார். ராகுல்காந்தி எம்.பி.யை சந்தித்த பின்னர் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்று காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா இன்று மாலைக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தேசிய கட்சியான காங்கிரஸை திமுக இப்படி உதாசணப்படுத்தும்போது, தமிழக மக்களை எப்படி உதாசணப்படுத்துவார்கள் என்று பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News