தி.மு.க., மாநாட்டில் ஓவைசி இல்லை.? இந்துக்கள் ஓட்டு விழாதுனு பயமா.!
தி.மு.க., மாநாட்டில் ஓவைசி இல்லை.? இந்துக்கள் ஓட்டு விழாதுனு பயமா.!
By : Kathir Webdesk
ஜனவரி 6ம் தேதி திமுக சார்பில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஓவைசி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
‘இதயங்களை இணைப்போம்’ என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் நிறுவனரும், எம்.பி.யுமான ஓவைசி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சமீபத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக கூறப்பட்டது.
இதனால் அவர் திமுக மாநாட்டில் பங்கேற்று கூட்டணியை உறுதிப்படுத்துவார் என்று ஊடகங்களில் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டம் தொடர்பாக திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் மஸ்தான் விளக்கம் அளித்துள்ளார். அதில் ஜனவரி 6ம் தேதி திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு நடத்தும் பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்கவில்லை. ராயப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் தோழமைக் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு மற்றொரு காரணமும் உள்ளதாக கூறப்படுகிறது. ஓவைசி முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார். தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக ஏதாவது கருத்து தெரிவித்தால் அது தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்கும் என்று திமுக தலைமைக்கு தெரிய வந்திருக்கும். இதனையடுத்துதான் ஓவைசி பங்கேற்றவில்லை என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.