Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில்களில் கரைவேட்டிக்காரர்களை அறங்காவலர்களாக நியமிப்பதா? தி.மு.க. அரசுக்கு ஹெச்.ராஜா கண்டனம்!

கோயில்களில் கரைவேட்டிக்காரர்களை அறங்காவலர்களாக நியமிப்பதா? தி.மு.க. அரசுக்கு ஹெச்.ராஜா கண்டனம்!

ThangaveluBy : Thangavelu

  |  12 Jan 2022 4:08 AM GMT

இந்து கோயில்களில் திருட்டுத்தனமாக கரை வேட்டிக்காரர்களை அறங்காவலர்களாக நியமனம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக திமுக அரசு மீது ஹெச்.ராஜா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்து கோயில்களில் சட்ட விரோதமாக அழித்து விடுவதற்கு திமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும், கோயில் நகைகளை உருக்குவது மற்றும் கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது போன்ற செயல்களில் திமுக ஈடுபடுகிறது. இது போன்ற செயல்களை அறங்காவலர்கள் இல்லாமல் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. எனவே அதனை மதித்து திமுக அரசு நடக்க வேண்டும். கோயில்கள் முழுவதிலும் நிதி இருக்கக்கூடாது என்று திமுக எண்ணுகிறது.


மேலும், கோயிலில் அறங்காவலர்கள் நியமனம் வெளிப்படை தன்மை இல்லாமலேயே நடைபெற்று வருகிறது. இந்த குழுவில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் மகளிர் இடம்பெற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனை பின்பற்றாமல் கரை வேட்டிக்காரர்களை திருட்டுத்தனமாக அறங்காவலர்களாக நியமனம் செய்ய முயற்சி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy:Aasianetnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News