Kathir News
Begin typing your search above and press return to search.

'சில குடும்பத்திற்காக உழைப்பதற்கு விருப்பமில்லை' - பா.ஜ.க'வில் இணைந்த தி.மு.க எம்.பி திருச்சி சிவா மகன் சூர்யா அதிரடி

சில குடும்பத்திற்காக உழைப்பதற்கு விருப்பமில்லை - பா.ஜ.கவில் இணைந்த தி.மு.க எம்.பி திருச்சி சிவா மகன் சூர்யா அதிரடி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 May 2022 5:20 AM GMT

திமுக எம். பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பாஜக-வில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைய தனது தந்தை சிவா மறுத்த நிலையில், அதனை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார் சூர்யா.

திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும், நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம்" என பாஜகவில் இணைந்ததும் சூர்யா தெரிவித்தார்.

நான் கனிமொழி ஆதரவாளர். அதனால் கட்சித் தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டதால் என்னையும், எனது மனைவி மற்றும் குழந்தைகளையும் எனது தந்தை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு திமுகவில் எந்த பதவியும் கிடைக்காமல் தடுப்பதில் எனது தந்தையும் முக்கிய பங்கு வகித்து வருகிறார் எனக்கூறினார்.

Inputs From: Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News