வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்த போலீசார் மீது தி.மு.க.வினர் கொலை வெறி தாக்குதல்: வாணியம்படியில் ஒருவர் கைது.!
ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் திமுக நிர்வாகிகள் ரவி, பெருமாள் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர்கள் தங்களது தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களின் பெயர் பட்டிலை கையில் வைத்துக்கொண்டு வீடு, வீடாக சென்று பணத்தை வழங்கி திமுக வேட்பாளர் வில்வநாதனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
By : Thangavelu
வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வதை தடுக்க முயன்ற உதவி காவல் ஆய்வாளர் உட்பட 4 காவலர்களை திமுக நிர்வாகிகள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி விட்டு, பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் வாணியம்படியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுகவினர் வாக்களார்களுக்கு பணம் விநியோகம் செய்து வருகின்றனர். இதனை கண்காணிப்பதற்காக தேர்தல் பறக்கும்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அது போன்று கண்காணித்து பிடிக்க செல்லும்போது, திமுகவினர் உருட்டுக்கட்டையால் தாக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக வில்வநாதன் போட்டியிடுகிறார். ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் திமுக நிர்வாகிகள் ரவி, பெருமாள் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர்கள் தங்களது தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களின் பெயர் பட்டிலை கையில் வைத்துக்கொண்டு வீடு, வீடாக சென்று பணத்தை வழங்கி திமுக வேட்பாளர் வில்வநாதனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த வாணியம்பாடி உதவி காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் 3 காவலர்கள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, ரவி வைத்திருந்த 52 ஆயிரத்து 500 ரூபாயை காவல் துறையினர் கைப்பற்றி அவரை காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
அப்போது இதனை கேள்விப்பட்ட மற்ற திமுக நிர்வாகிகளான பெருமாள், செல்வராஜ் மற்றும் அவருடன் இருந்த சிலர் அங்கு விரைந்து சென்று உருட்டுக்கட்டை மற்றும் ஆயுதங்களால் உதவி காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் உட்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, போலீசாரிடம் இருந்த ரூ.52,500-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதனையடுத்து தாக்குதலில் காயமடைந்த போலீசார் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் ரவி என்பவரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய செல்வராஜ் மற்றும் பெருமாள் உட்பட 8 பேரை தேடி வருகின்றனர்.