திருப்பூர்: குடிபோதையில் வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் காவல் ஆய்வாளரிடம் மல்லுக்கட்டிய தி.மு.க. பிரமுகர்.!
திருப்பூர் அருகே திமுக ஒன்றிய செயலாளர் ரவி என்பவர் குடிபோதையில் பெண் காவல் ஆய்வாளர் கோமதியிடம் தகராறு செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் அருகே திமுக ஒன்றிய செயலாளர் ரவி என்பவர் குடிபோதையில் பெண் காவல் ஆய்வாளர் கோமதியிடம் தகராறு செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் வெளியில் செல்வதை கண்காணிக்க போலீசார் மாவட்டம் தோறும், முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து, இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அது போன்று பணியாற்றுபவர்களிடம் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் தகராறு செய்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசி தேவையை தவிர வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் அபராதம் விதித்தும், வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திமுகவை சேரந்த பொங்கலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளரான ரவி என்பவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில் காரில் வலம் வந்தார்.
இதனை கண்ட போலீசார் உடனடியாக காரை நிறுத்தி சோதனையிட்ட போது, காரில் பயணம் செய்த அனைவரும் முககவசம் இன்றி இருந்துள்ளனர். அப்போது ரவியிடம் முககவசம் அணியாமலும் ஊரடங்கை மீறி ஏன் வெளியே சுற்றி வருகின்றனர் என கேட்டுள்ளார். போதையில் இருந்த திமுக பிரமுகர் ரவி, பெண் ஆய்வாளரிடம், நாங்க ஆட்சிக்கு வந்துட்டோம், வழக்கு போடறதுனா போட்டுக்கோ என்று ஒருமையில் பேசியுள்ளார்.
இதனிடையே சக நண்பர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது பெண் காவலர் முன்பாக ரவி மிகவும் ஆபாசமாக பேசினார். தனது வேட்டி அவிழ்ந்து விழுந்தபோதும் அதனை கண்டுகொள்ளாமல் அநாகரிகமாக நடந்து கொண்டார். ஒரு வழியாக சமாதானம் செய்து ரவியை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்சிக்கு திமுக வந்துவிட்டதால் சாதாரண கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை தங்களின் அராஜக போக்கை கையில் எடுத்துள்ளது. பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளது.
எனவே இது போன்ற நிகழ்வுகளை காவல்துறையினர் வேடிக்கை பார்க்காமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.