வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தி.மு.க.வின் சதி.. மச்சானை வைத்து மறைமுகமாக வழக்கு தொடரும் மு.க.ஸ்டாலின்.!
தமிழக அரசு பணிகளில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். இதனால் தற்போது இடஒதுக்கீடு மசோதா சட்டப்படி நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணிகளில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். இதனால் தற்போது இடஒதுக்கீடு மசோதா சட்டப்படி நிறைவேற்றப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை அளிக்கக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார். அந்த சட்டத்தை எப்படியாவது தடுத்து விடவேண்டும் என்று தனது மனைவி துர்காவின் சகோதரர் ஜெய.ராஜமூர்த்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் வலதுகரமான திருச்சி மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. மற்றும் கருணாநிதியின் உதவியாளராக இருந்த கே.நித்தியானந்தம் ஆகியோர் கடந்த மாதம் 28ம் தேதி, இசை வேளாளர் இளைஞர் பேரவை என்கிற பெயரில் திருச்சியில் ஒன்றுகூடி, வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக வன்னியர்கள் வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். அவர்களுக்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி தற்போது 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்துள்ளார்.
ஆனால் இந்த சட்டம் வன்னியர்களுக்கு கிடைத்துவிட கூடாது என்பதற்காக ஸ்டாலின் பல்வேறு வகையிலான முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறார். அவரது அப்பா கருணாநிதியும் இதே போன்றுதான் வன்னியர்களுக்கு எதுவும் கிடைத்துவிடாமல் செய்தார். தற்போது அவரது மகன் ஸ்டாலினும் அதே பாணியை கையாண்டு வருகிறார்.
அதாவது திருச்சியில் கூட்டத்தை ஏற்பாடு செய்த கே.ஆர். குகேஷ் என்பவர் சென்னையை சேர்ந்த திமுக நிர்வாகி. ஸ்டாலின் குடும்பத்திற்கு தூரத்து சொந்தம் என்பது தெரியவந்துள்ளது.
ஸ்டாலினின் வளர்ப்பு மகன் என்றும் ஸ்டாலின் வீட்டில் அடுப்பங்கரை வரை சென்று வரும் அளவுக்கு செல்வாக்கு கொண்டவர் அன்பில் பொய்யாமொழி. இன்னொருவரான நித்தியானந்தம் கலைஞரின் கடைசி காலத்தில் அவரை கவனித்துக் கொண்டவர். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்துதான் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளனர்.
அதாவது குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதைப் போல, ஸ்டாலின் தனது சொந்தங்களை விட்டு வன்னியர்கள் குறித்து ஆழம் பார்க்கிறார். அரும்பாடு பட்டு மருத்துவர் ராமதாஸ் வென்றெடுத்த சமூகநீதியை சிதைக்கத் துடிக்கிறார்.
இந்நிலையில், இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள பாமகவால் முடியும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே திமுகவில் உள்ள ஒட்டுமொத்த வன்னியர்களும் திமுகவை புறக்கணித்து அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தல்களில் திமுகவினர் வடமாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ஒட்டுமொத்த வன்னியர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளனர். வரும் தேர்தலில் வடமாவட்டங்களில் திமுக இல்லாத நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்றும் பாமகவினர் சபதம் ஏற்றுள்ளனர்.