Begin typing your search above and press return to search.
'தி.மு.க காரையே எடுக்க சொல்றியா' என போலீஸ் கன்னத்தில் அறைந்த தி.மு.க அமைச்சரின் உதவியாளர் !

By :
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபா என்பவர், போக்குவரத்துக் காவல்துறை காவலர் முத்துகுமாரைக் கன்னத்தில் அறைந்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
தி.மு.க ஆட்சியில் காவல்துறையினருக்கே அடி விழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபா என்பவர் தன்னுடைய காரை நிறுத்தியிருக்கிறார். அப்பொழுது போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது என போக்குவரத்து காவலர் முத்துகுமார் என்பவர் அமைச்சரின் உதவியாளர் கிருபாவிடம் கூறியிருக்கிறார். உடனே கடுப்பான கிருபா போக்குவரத்துக் காவல்துறை காவலர் முத்துகுமாரைக் கன்னத்தில் அறைந்துள்ளார்.
ஒரு அமைச்சரின் உதவியாளரே காவல்துறை காவலரை கன்னத்தில் அறைந்த இந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Next Story