Kathir News
Begin typing your search above and press return to search.

"50 ரூபாய் குடுங்க சார் ! உங்களுக்கு வீட்டு மனை இலவசம்" - தி.மு.க லெட்டர் பேடில் பலே சதுரங்க வேட்டை !

Breaking News.

50 ரூபாய் குடுங்க சார் ! உங்களுக்கு   வீட்டு மனை இலவசம் - தி.மு.க லெட்டர் பேடில் பலே சதுரங்க வேட்டை !
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 Sept 2021 10:46 PM IST

உங்களுக்கு வீடு வேணுமா 30 ரூபாய் குடுத்து இந்த விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து நலைமை செயலகத்தில் அளித்தால் உங்களுக்கு வீடு என நவீன முறையில் தி.மு.க'வினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தி.மு.க ஆட்சியில் உங்களுக்கு இலவச வீடு கிடைக்கும் என அரசிடம் இல்லாத திட்டத்தை மக்களிடம் தவறாக பரப்பி அதன் மூலம் நூதன முறையில் மக்களிடம் மோசடி செய்து வருகின்றனர் தி.மு.க'வினர். சென்னை தலைமைச் செயலகத்தின் எதிர்புறத்தில் உள்ள பகுதியில் ஏராளமான தி.மு.க'வினர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படம் அச்சிடப்பட்ட தி.மு.க லெட்டர் பேடில், விண்ணப்ப படிவம் தயாரித்து ஒரு விண்ணப்ப படிவம் இருபது ரூபாயும் அதை பூர்த்தி செய்வதற்கு பத்து ரூபாய் என 30 ரூபாயை பொதுமக்களிடம் வசூலித்து வருகிறார்கள்.

இதனை நம்பி ஏராளமான பொதுமக்களும் அந்த விண்ணப்பத்தை பணம் கொடுத்து வாங்கி பூர்த்தி செய்து தலைமை செயலக பெட்டியில் போட்டு வருகின்றனர். இதற்காக விண்ணப்பத்திற்கு 20 ரூபாயும், பூர்த்தி செய்ய 30 ரூபாயும் விலை வேறு கொடுக்கின்றனர். இப்படி ஒரு நூதன முறையில் ஏமாற்ற தி.மு.க'வினர் துவங்கிவிட்டனர். ஆனால் கட்சி தலைமையிடமிருந்தோ, சம்மந்தப்பட்ட துறை அமைச்சரிடமிருந்தோ இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News