Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி, அண்ணாமலையை புகழ்ந்ததால் பழ.நெடுமாறன் மீது பாயும் தி.மு.க'வினர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாராட்டியதால் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் மீது தி.மு.க'வினர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

மோடி, அண்ணாமலையை புகழ்ந்ததால் பழ.நெடுமாறன் மீது பாயும் தி.மு.கவினர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 May 2022 5:00 PM IST

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாராட்டியதால் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் மீது தி.மு.க'வினர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தை ஆளும் தி.மு.க'வினர் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க'வை விட பா.ஜ.க'வையும் அதன் தலைவர் அண்ணாமலையும் கடுமையாக எதிர்ப்பதை 24 மணி நேர வேலையாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் பழ.நெடுமாறன், ஈழத்தமிழ் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் ஏற்பாடு செய்து முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

இதில் பேசி பழ.நெடுமாறன் கூறியதாவது, 'அண்ணாமலை ஐ.பி.எஸ் என்று கேள்விப்பட்டேன், ஆனால் ஐ.எப்.எஸ் அதிகாரி போல் இலங்கைப் பிரச்சினையைப் பற்றி தெளிவாக புள்ளிகளுடன் பேசினார். தமிழர், சிங்களர் வேறுபாடு இல்லாமல் இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி அள்ளிக் கொடுத்திருக்கிறார். பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்கவர். பெருந்தன்மையும், பொறுமையும் அண்ணாமலைக்கு அதிகம்' என பழ.நெடுமாறன் பேசினார்.

இதனால் கடுப்பான திமுகவினர் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களும் நெடுமாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர், தி.மு.க'வின் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் செயலாளருமான அப்துல்லா இதுகுறித்து கூறும்போது 'தமிழ் தேசியம் என்பது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி சேர்ந்த குழந்தை என்பது போல் உறுதியாகி விட்டது' என விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Source - Dinamalar



Next Story
கதிர் தொகுப்பு
Trending News