Kathir News
Begin typing your search above and press return to search.

மின்கட்டணத்தை குறைக்க போராடியவர்களை கொன்று குவித்த திமுக ஆட்சி.. பிச்சைக்காரர்களின் போராட்டம்  என்று பேசிய கருணாநிதி.!

மின்கட்டணத்தை குறைக்க போராடியவர்களை கொன்று குவித்த திமுக ஆட்சி.. பிச்சைக்காரர்களின் போராட்டம்  என்று பேசிய கருணாநிதி.!

மின்கட்டணத்தை குறைக்க போராடியவர்களை கொன்று குவித்த திமுக ஆட்சி.. பிச்சைக்காரர்களின் போராட்டம்  என்று பேசிய கருணாநிதி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Dec 2020 9:40 AM GMT

கடந்த 1970ம் ஆண்டு திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை எதிர்த்து போராடிய விவசாயிகளை ஈவு இரக்கமின்றி திமுக அரசு சுட்டுக்கொன்றது. அப்போது முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். விவசாயிகளுக்காக அன்று முதல் இன்று வரை துரோகம் இழைத்து வருகிறது.

முல்லைப்பெரியாறு, காவிரி ஆணையம் என பல பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம். டெல்டா விவசாய நிலத்தில் மீத்தேன் எடுக்க திமுக ஆட்சி அனுமதி அளித்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிலையில், கடந்த 1970ம் ஆண்டு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக திமுக அரசு உயர்த்தியதை எதிர்த்து தமிழக விவசாயிகள் போராடினார்கள்.

1970 மே 9 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் என்று பல ஆயிரம் கணக்கில் பெரும் பேரணியாக நடந்து, கட்டை வண்டிப் போராட்டம் என்று கோவை நகரையும் மற்ற தமிழக நகரங்களையும் திக்குமுக்காடச் செய்தனர் அன்றைய விவசாயிகள். இந்த போராட்டத்தால் நகரங்கள் அனைத்தும் அதிர்ந்து போனது.

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால், ஜூன் 15ம் தேதி அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19-ம் தேதி முழு அடைப்பும் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர். போராட்டத்தின் உச்சத்தில் இருந்த கருணாநிதி அரசு போலீசாரை கொண்டு துப்பாக்கியால் விவசாயிகளை சுட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமிகவுண்டர், மாரப்பகவுண்டர், ஆயிக்கவுண்டர் உள்ளிட்ட விவசாயிகள் தனது இன்னுயிரை நீத்தனர்.

இதற்கு முழு காரணமும் கருணாநிதித்தான் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்த இறப்புக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி விவசாயிகளின் மரணத்தை பத்திரிகையாளரிடம் கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். துப்பகியிலிருந்து தோட்டா வராமல் மலர்களா வரும் என்று பேட்டி கொடுத்தார். மேலும் பிச்சைக்காரர்களின் போராட்டம் என கூறியிருந்தார். இன்று உள்ள பல இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

விவசாயிகளின் மரணத்தை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் உச்சநிலைக்கு சென்றது. இதனால் செய்வதறியாமல் யூனிட்டுக்கு 1 பைசா மின்கட்டணத்தை குறைத்தார் கருணாநிதி. காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 அம்சக் கோரிக்கைகளை, அரசிடம் முன்வைத்து நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள். 15.04.1972க்குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கெடு விதித்தார்கள். மே 9ல் மறியல் போராட்டம் தொடங்கியது.

போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் பயன்படுத்தும் உணவு வகைகளான காய்கறிகள், பால் உள்ளிட்டவற்றை நகரத்திற்கு அனுப்பாமல் (02.06.1972 முதல் 04.06.1972 வரை) 2 நாட்கள் நிறுத்தி வந்தனர். இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதற்கும் மசியாத கருணாநிதிக்கு அடுத்த அடி கொடுக்க தயாரானார்கள் விவசாயிகள்.

மாட்டு வண்டிப் போராட்டம்: கோவை விவசாயிகள் 07.06.1972 ம் ஆண்டு புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள், கோவை நகரின் சாலைகளிலும் மூளை முடுக்குகளிலும் மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரமே ஸ்தம்பித்தது.

அமெரிக்காவில் வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி ‘மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்’ என்று இந்தப் போராட்டச் செய்தியாக வெளியிட்டது. போராட்டத்தின் வீச்சை உணர்ந்த அரசு பணிந்தது. இதனிடையே தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இதே காலகட்டத்தில் 05.07.1972இல் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் 9 விவசாயிகளும், அன்று ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டம், இன்றைக்கு விருதுநகர் மாவட்டம் வெற்றிலையூரணி, மீசலூர், பாலவனத்தம் கிராமங்களில் முறையே ஒருவர் வீதம் மொத்தம் மூன்று பேரும், பெருமாநல்லூரில் மூன்று பேரும், ஆக மொத்தம் 15 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.

இது போன்று பல அடக்கமுறைகளை கருணாநிதி செய்துள்ளார். இவரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். தற்போது அவரின் மகனும் திமுக தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினும் விவசாயிகளுக்கு எதிராக இரட்டை வேடத்தை போட்டுக்கொண்டு திரிகிறார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை வேண்டும் என்றே விவசாயிகளிடம் தவறாக எடுத்துறைத்து குழப்பி வருகின்றார். இந்த 3 சட்டங்களும் விவசாயிகளுக்கு பெரும் நன்மை அளிக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News