தோல்வி பயத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க.வினர் அட்டூழியம்!
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான நேரம் இருக்கும் முன்னரே, அதிமுகவினரின் வேட்புமனுக்களை அதிகாரிகளை வாங்க விடாமல் திமுக மாவட்டச் செயலாளர் மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அரசியல் கட்சியினர் ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அது போன்று ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. மாலை 4.40 மணியளவில் அதிமுக வேட்பாளர் கோவிந்தன் மனுத்தாக்கல் செய்ய சென்றுள்ளார்.அப்போது அங்கு இருந்த திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் மற்றும் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுக வேட்பாளரின் மனுவை பெறவிடாமல் அதிகாரிகளிடம் மிரட்டினர்.
இந்த சம்பவத்தால் அதிமுக மற்றும் திமுகவினருக்க இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த போலீசார் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுள்ளனர் என அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.
Source, Image Courtesy: News J