Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ரவுடி கும்பல் தாக்குதல்: மருத்துவமனையில் தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை.!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக தொண்டர்களை அண்ணாமலை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். விரைவில் குணமடைந்து கட்சி பணிகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உற்சாகப்படுத்தினார்.

தி.மு.க. ரவுடி கும்பல் தாக்குதல்: மருத்துவமனையில் தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 March 2021 2:45 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

அது போன்று பரப்புரையின்போது திமுக ரவுடி கும்பல் அதிமுக, பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற சம்பவம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் கரூரில் உள்ள 4 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது.





இதனையடுத்து திமுகவிற்கு தோல்வி பயம் காரணமாக அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கரூர் அதிமுக வேட்பாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான விஜய்பாஸ்கருக்கு ஆதரவாக தொண்டர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது இரவு நேரங்களில் திமுக ரவுடி கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் 50க்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் கூட்டணி தொண்டர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் துணைத்தலைவருமான அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக ரவுடிக்கும்பல் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போன்று அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் டிரைவரையும் திமுக கும்பல் தாக்கியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.




இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக தொண்டர்களை அண்ணாமலை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். விரைவில் குணமடைந்து கட்சி பணிகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உற்சாகப்படுத்தினார்.




ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே திமுகவினர் இப்படி அராஜகம் செய்தால், ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் பாதாளத்திற்கு தள்ளப்படுவார்கள் என்பது கரூர் மாவட்ட திமுக ரவுடி கும்பலே சாட்சியாக உள்ளது.





எனவே வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அவர்களின் கூட்டணி வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். அப்போதுதான் ரவுடிக்கட்சி தமிழகத்தை விட்டு ஒழியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News