Kathir News
Begin typing your search above and press return to search.

கைதுக்கு பயந்து காலில் விழுந்த தி.மு.க செயலர் - பெண்களை இழிவாகப் பேசியதற்கு மன்னிப்பு.!

கைதுக்கு பயந்து காலில் விழுந்த தி.மு.க செயலர் - பெண்களை இழிவாகப் பேசியதற்கு மன்னிப்பு.!

கைதுக்கு பயந்து காலில் விழுந்த தி.மு.க செயலர் - பெண்களை இழிவாகப் பேசியதற்கு மன்னிப்பு.!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  23 Nov 2020 8:48 AM GMT

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை தரக்குறைவாகப் பேசிய திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தியாகராஜன் வெள்ளாளர் சமுதாய பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிய ஆடியோ சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. இது அந்த சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிலர் தியாகராஜன் மீது காவல் துறையில் புகார் அளித்தனர்.

அரசியல் எதிரிகள் தனது பெயரைக் கெடுக்க சதி செய்வதாகவும் முதலில் தெரிவித்த அவர், பின்னர் கைதைத் தவிர்க்க தலைமறைவானதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நேற்று தி.மு.க முதன்மைச் செயலாளர் நேருவுடன் வந்த தியாகராஜன், திருச்சியில் நடந்த சோழிய வெள்ளாளர் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றச் சங்கம் இணைந்து நடத்திய கூட்டத்தில் தனது கீழ்த்தரமான பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.

இந்த பகிரங்க மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாக சங்க நிர்வாகிகளும் அறிவித்தனர். பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்வதாக சங்கத்தினர் தெரிவித்த போதும், சட்டபடி எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ளனர். அ.தி.மு.கவினர் காடுவெட்டி தியாகராஜனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில், வெள்ளாளர் சமூகத்தின் வேறு சில பிரிவுகள் அவரது மன்னிப்பை ஏற்காததாகத் தெரிகிறது.

இந்தப் பிரச்சினையே‌ இன்னும் முழுதாக முடியாத போது தியாகராஜன் ‌வன்னியர் சமூகப் பெண்களை தரக்குறைவாகப் பேசிய ஆடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கே உடன் பிறப்புகள் தலை சுற்றிப் போயுள்ள நிலையில், தி.மு.க முக்கியப் புள்ளியான முன்னாள் அமைச்சர் நேரு, தியாகராஜன் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர் தேர்தலில் வெற்றி பெற உதவியதாக பேசிய ஆடியோவும் வெளியாகி புயலைக் கிளம்பி உள்ளது.

சாதியை ஒழித்தோம், சமூக நீதியை அளித்தோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மேடைக்கு மேடை கூவிக் கொண்டு இருக்கும் போது, கட்சிக்காரர்கள் இப்படி ஒவ்வொரு சமூகத்தினரை, குறிப்பாக பெண்களைக் கீழ்த்தரமாக பேசி வருவது அடி‌மட்ட தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடுநிலையாளர்களுக்கு தி.மு.கவின் சமூக நீதி முகத்திரையையும் இந்த சம்பவம் கிழித்துக் காட்டி இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News