Kathir News
Begin typing your search above and press return to search.

"புதுசா வந்தவங்களுக்கு பதவியா? அப்ப நாங்க உழைக்காமலா இருந்தோம்" - புலம்பும் தி.மு.க சீனியர் வட்டாரம்

"புதுசா வந்தவங்களுக்கு பதவியா? அப்ப நாங்க உழைக்காமலா இருந்தோம்" - புலம்பும் தி.மு.க சீனியர் வட்டாரம்

புதுசா வந்தவங்களுக்கு பதவியா? அப்ப நாங்க உழைக்காமலா இருந்தோம் - புலம்பும் தி.மு.க சீனியர் வட்டாரம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 Feb 2021 4:12 PM GMT

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க'வில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு கட்சியில் காலம்காலமாக உழைத்தவர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தி.மு.க'வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக சட்டதிட்ட விதி 18, 19ன் படி தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளராக வழக்கறிஞர் இரா.ராஜூவ்காந்தி நியமிக்கப்படுவதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏற்கனவே குடும்ப ஆதிக்கம், உதயநிதியின் தலையீடு, வாரிசுகளின் பதவி ஆக்கிரமிப்பு என கடும் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கும் தி.மு.க சீனியர் உபிக்களுக்கு இன்னும் அதிகமாக சூடேறியுள்ளதாக தி.மு.க சீனியர் வட்டாரங்கள் புலம்புகின்றனர்.

புதுசா வந்தவங்களுக்கு பதவி'ன்னா அப்ப நாங்க ஏதுமே செய்யலையா என பொறுமுகின்றனர். இதனால் வரும் தேர்தலில் சீனியர்கள் வேலை பார்க்காமல் ஒதுங்கி கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை என சில சீனியர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News