"ஐயோ ஒரு ஓட்டு வாங்கிட்டாரு" - சீரியல் கணக்காக நடிக்கும் தி.மு.க ஆதரவு நெட்டிசன்கள் !

By : Mohan Raj
சுயேட்சை வேட்பாளர் ஒரு ஓட்டு வாங்கி தோல்வியடைந்ததை பா.ஜ.க வேட்பாளர் என போலி செய்தியை ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன.
கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு கார் சின்னத்தில் போட்டியிட்ட சுயைட்சை வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.
மேலும் இங்கு தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அ.தி.மு.க'வை சேர்ந்த வேட்பாளர் 196 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கு மொத்தம் 910 வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஆனால் ஒரு ஓட்டு வாங்கி தோல்வியடைந்தவர் கார் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஆவார். ஆனால் ஊடகங்களும், தி.மு.க'வை சேர்ந்த சமூக வலைதள பதிவுகளும் தோல்வியடைந்தவரை பா.ஜ.க வேட்பாளர் என்றே பொய் செய்தியை பரப்பி வருகின்றனர். இவ்வளவு இணையதள வசதிகள் இருந்து பொய் செய்தியை கூச்சமில்லாமல் ஊடகங்கள் பரப்பி வருவது மக்களிடையே பரபரப்பாகியுள்ளது.
