Kathir News
Begin typing your search above and press return to search.

'உதயநிதி' இல்லை 'உதார்நிதி' - தி.மு.க'வின் நிழல் முதல்வரை பங்கம் செய்த ஜெயக்குமார் !

Breaking News.

உதயநிதி இல்லை உதார்நிதி - தி.மு.கவின் நிழல் முதல்வரை பங்கம் செய்த ஜெயக்குமார் !

Mohan RajBy : Mohan Raj

  |  14 Sep 2021 10:30 AM GMT

உதயநிதி ஸ்டாலின் இல்லை உதார்நிதி ஸ்டாலின் என தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதியை பங்கம் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பன்வாரிலால் புரோஹித்தை இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, "தேர்தல் நேரத்தில் தி.மு.க வாய்க்கு வந்தபடி எல்லாம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறினார். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என கூறினர், ஆனால் இப்போது அது ஏன் நடக்கவில்லை என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வுக்கு விலக்கு பெற அ.தி.மு.க ஆட்சியில் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் தி.மு.க நீட் தேர்வை ரத்து செய்கிறோம் எனக் கூறி மாணவர்களை ஏமாற்றியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் உதார்நிதி ஸ்டாலினாக வலம் வருகிறார் என விமர்சித்த ஜெயக்குமார், தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்" என கூறினார்.

Source - One India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News