Kathir News
Begin typing your search above and press return to search.

இரட்டை இலைக்கு வாக்கு கேட்கும் தங்க தமிழ்ச்செல்வன்.. அதிர்ச்சியில் தி.மு.க.வினர்.!

தேர்தல் பரப்புரையில் பழக்க தோஷத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது போன்று இரண்டு விரல்களை காட்டி செல்கிறார்.

இரட்டை இலைக்கு வாக்கு கேட்கும் தங்க தமிழ்ச்செல்வன்.. அதிர்ச்சியில் தி.மு.க.வினர்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 March 2021 2:38 AM GMT

தேர்தல் பரப்புரையில் பழக்க தோஷத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது போன்று இரண்டு விரல்களை காட்டி செல்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரையும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

அதிமுக, திமுக கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று துணை முதலமைச்சர் போட்டியிடும் போடிநாயக்கனூரில் அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார்.





போடி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் பிரச்சாரம் செய்யும்போது, தனது இரட்டை விரலை காண்பித்து செல்கிறார். பார்க்கிறவர்கள் அனைவரும் இரட்டை இலைக்குதான் வாக்கு சேகரித்து வருகிறார் என பேசிக்கொள்கின்றனர்.

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்றாலும், தனது பழைய கட்சியின் பாசம் போகவில்லை என்று போடிநாயக்கனூர் மக்கள் பேசிக்கொள்கின்றனர். அதே போன்று பிரச்சாரத்திலேயே இரட்டை இலை காண்பித்து செல்பவர், வாக்களிக்கும்போது மறந்து இரட்டை இலைக்குதான் வாக்களிப்பார் என மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

இதனால் திமுகவினர் அனைவரும் விழிபிதுங்கி நிற்கின்றனர். நமது கட்சியில் இருந்து கொண்டு அதிமுகவிற்கு ஆதரவாக இரட்டை விரலை காண்பித்து செல்கிறாரே என்றும் ஆதங்கப்படுவதை காணமுடிகிறது. எது எப்படியோ மீண்டும் அதிமுக ஆட்சியை மலரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News