இயற்கை மரணம் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களை கொச்சைப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா.?
பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்க முடியாமல் இரண்டு பேரும் இறந்து விட்டார்கள் என கூறினார். அவரது பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும் என்பதை தெரியாமல் பேசி வருகிறார்.

இயற்கை மரணம் அடைந்த 2 மத்திய அமைச்சர்கள் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பாஜக தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களையும் வம்புக்கு இழுத்துள்ளார் என்றே தோன்றுகிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுகவை சேர்ந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்க முடியாமல் இரண்டு பேரும் இறந்து விட்டார்கள் என கூறினார். அவரது பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும் என்பதை தெரியாமல் பேசி வருகிறார்.
பாஜகவில் மிகவும் மூத்த தலைவர்களாக சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி இருந்தனர். நாட்டிற்காக கடைசி வரை உழைத்துக்கொண்டிருந்தவர் அருண்ஜெட்லி, அனைவருக்கும் தெரியும். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் நாட்டிற்காக உழைப்பதற்கு மறக்கவில்லை.
இது போன்று தொடர்ந்து மறைந்த தலைவர்கள் மற்றும் பெண்கள் குறித்து கருத்து தெரிவிப்பது திமுகவினருக்கு புதிதல்ல. எனவே இது போன்றவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் திருந்துவார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவை சேர்ந்த ராசா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாயார் குறித்து கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தேர்தல் ஆணையம் 2 நாட்களுக்கு பிரச்சாரத்திற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.