Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் அழிவது போன்று தி.மு.க'வும் விரைவில் அழியும் - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

காங்கிரஸ் அழிவது போன்று தி.மு.கவும் விரைவில் அழியும் - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

ThangaveluBy : Thangavelu

  |  10 May 2022 8:41 AM GMT

தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்து கொண்டிருப்பதை போன்று தி.மு.க.வும் விரைவில் அழியும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்திற்கு வருகை புரிந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் அழிந்து கொண்டிருப்பதை போன்று தி.மு.க.வும் அழியும். எல்.ஐ.சி. இன்றும் அரசு நிறுவனம்தான். இழப்பை சந்திக் கின்ற நிறுவனத்தை தனியாருக்கு வழங்குகிறோம்.

மேலும், நானும் ராஜா என்று சொல்லிக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் துபாய்க்கு போய்விட்டு வந்தார். அவரை புகழ்ந்து தள்ளிய விக்கிரமராஜா, தேர்தலுக்கு முன்பாக மால்கள் எதுவும் தமிழகத்தில் வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். ஆனால் லூலு மால் கொண்டுவருவதற்கு காரணமான தி.மு.க.வை விக்கிரமராஜா புகழ்ந்து வருகிறார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பே கோவையில் லூலு மால் வருவதற்கு ஆயத்த பணிகளை மேற்கொண்டு அதற்கான வேலைகளை செய்ய துவங்கி விட்டனர். எனவே மாலுக்கான ஒப்பந்தம் இப்போது போட்டதாக சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: NDTV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News