Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவின் 3 அமைச்சர்கள் சிறைக்கு செல்லப்போகிறார்களா? - யார் அந்த 3 பேர்? பின்னணி என்ன?

திமுக அமைச்சர்கள் இரண்டு பேர் தற்பொழுது சிறை செல்ல போகின்றனர் என்ற தகவல்கள் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் 3 அமைச்சர்கள் சிறைக்கு செல்லப்போகிறார்களா? - யார் அந்த 3 பேர்? பின்னணி என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  21 Jan 2023 10:40 AM GMT

திமுக அமைச்சர்கள் இரண்டு பேர் தற்பொழுது சிறை செல்ல போகின்றனர் என்ற தகவல்கள் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் இருப்பதும் குறிப்பாக எதிர்க்கட்சிகள் திமுகவினர் அதிகமாக ஊழல் செய்கின்றனர் என குற்றம் சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நெருங்குவதால் அவர்கள் இருவரும் விரைவில் சிறை செல்ல வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இதனால் திமுகவிற்குள் மிகப்பெரிய சலசலப்பு உருவாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்ரே தன் மகன் ராஜ் தாக்கரேவுக்கு பட்டாபிஷேகம் நடத்தியதும் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே குடும்பம் ஆட்சி பீடத்திலிருந்து அகற்றப்பட்டது, சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தாக்ரே குடும்பத்தை ஆட்சியில் இருந்து அகற்றி கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றினர். அப்பொழுது தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்திலும் இதுபோன்று பட்டாபிஷேகம் நடக்கும் அப்போது அறிவாலயத்தில் சண்டைகள் உருவாகும், உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்தும் பொழுது விரைவில் அது நடக்கும் எனவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சமூக வலைதளங்களிலும் தமிழ்நாட்டில் யார் அந்த ஏக்நாத் ஷிண்டே? யார் சிறை செல்வார்கள்? திமுகவை பொருத்தவரையில் யார் மீது உள்ள வழக்கு விரைவில் பாயும்? யார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்? என பெரிய விவாதமே நடந்தது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி ஆ.ராசா, எம்.பி.கனிமொழி ஆகியோர் மீது உள்ள வழக்குகளில் எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலையில் தற்பொழுது 3 திமுகவின் முக்கிய புள்ளிகள் மீது ஊழல் வழக்குகள் பாய்ந்து, திமுக ஆட்டம் காணும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஹெச்.ராஜா பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், தமிழ்நாட்டில இருப்பது ஸ்டாலின் ஆட்சியா? இல்லை மாலிக் கபூர் ஆட்சியா' என சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது' என கூறினார்.

திமுக முக்கிய புள்ளிகளின் வழக்கு குறித்து அவர் கூறும்போது மேலும் அவர் கூறும் பொழுது, தற்பொழுது 3 பேர் திமுகவிலிருந்து சிறை செல்ல உள்ளார்கள், அவர்களில் ஒன்று செந்தில் பாலாஜி, அடுத்த இடத்தில் அனிதா ராதாகிருஷ்ணன், பல்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் உள்ளிட்டோரை குறிப்பிட்டு கூறினார்.

இப்படி தமிழகத்தில் குறிப்பாக தற்போது ஆளும் திமுகவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹெச்.ராஜா இது போல் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சென்ற மாதம் திமுக எம்பி ஆ.ராசா மீது அமலாக்கத்துறை பதிந்த வழக்கின் மீது விசாரணையின் பிடி இறக்கியதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News