பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்.. அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை.!
பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்.. அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை.!

By : Kathir Webdesk
தமிழகம் முழுவதும் ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாக அரசுக்கு கோரிக்கைகள் வந்தது.

இதனையடுத்து வருகின்ற 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவிப்பில் கூறியிருந்தது. இந்நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரவல் இன்னும் முழுமையாக நீங்காத காரணத்தால் பள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
