பீகார் தேர்தல் முறையை தமிழகத்தில் பயன்படுத்தாதீங்க.. அலறும் டி.ஆர். பாலு.!
பீகார் தேர்தல் முறையை தமிழகத்தில் பயன்படுத்தாதீங்க.. அலறும் டி.ஆர். பாலு.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களப்பணியில் இறங்கியிருக்கும் அதே வேளையில், தேர்தல் ஆணையமும் தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே, அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைமுறையை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
அதாவது, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டு விடும். பின்னர் அதனை தபால் மூலமாக வாக்களிக்கலாம் என்றும் அந்த வாக்குகள் உரிய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்று பீகார் தேர்தல் ஆணையம் செயல்படுத்தியிருந்தது. இந்த முறையை திரும்பப்பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பீகார் தேர்தல் முறையை பின்பற்றுவது முறைகேட்டுக்கு வழி வகுக்கும் என்பதால் அதனை திரும்பப்பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். முதியர்வகளுக்காக தேர்தல் ஆணையம் இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. அவர்களின் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு இந்த முறை சிறந்ததாக அமையும் என்று பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் மட்டும் ஏன் இந்த முறைக்கு அலறுகின்றனர் என்று தெரியவில்லை.