Kathir News
Begin typing your search above and press return to search.

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் கடை வேணுமா நமக்கு மாமூல் வெட்டு - அமைச்சர் தா.மோ.அன்பரசனின் வசூல் வேட்டை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கடைகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கைகாட்டும் நபர்களுக்கு வழங்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் கடை வேணுமா நமக்கு மாமூல் வெட்டு - அமைச்சர் தா.மோ.அன்பரசனின் வசூல் வேட்டை
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 Aug 2022 7:25 PM IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கடைகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கைகாட்டும் நபர்களுக்கு வழங்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.


தி.மு.க காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக சிறு மற்றும் குரு தொழில்கள் துறை அமைச்சராக இருந்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் யார் ஒருவர் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் இந்த அமைச்சரின் கடைக்கண் பார்வைப்படாமல் நடக்காது என்கின்ற நிலை தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் உருவானது, தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது இறுதி கட்ட பணிகளை எட்டி உள்ளது.


அந்த ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடைகள், உணவகங்கள் கட்டப்பட்டு வருகின்றன அந்த கடைகளை வாடகைக்கு பெறுவதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் பள்ளிகள் முட்டி மோதி வருகின்றன.


ஆனால் அங்கு கடைகளை ஒதுக்குவதில் சில விதிமுறைகள் உள்ளன, அவை உள்ளனமுற்றோர், பார்வையற்றோர், சமூகத்தின் விளிம்ப நிலையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதி! ஆனால் அதன்படி கடைகள் வழங்கப்பட்டால் அரசியல் புள்ளிகளுக்கு அதில் வாய்ப்பு கிடைக்காது எனவே இந்த கடைகளை ஒதுக்குவதில் தா.மோ.அன்பரசன் யாருக்கு கை காட்டுகிறாரோ அவருக்கு தான் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


கடை ஒதுக்கியதில் வெளிப்படை தன்மை இல்லை என பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர், தங்களுக்கு தேவைப்படுபவர்களுக்காக கடைக்கு இவ்வளவு தொகை என நிர்ணயித்து கடை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புகார் எழுந்து வருகிறது. சிறிய சிபாரிசுகள் சென்றால் கூட அமைச்சர் அந்த மீட்டிங்கு பந்தல் செலவை ஏற்றுக் கொள், கட்சிக்கு இதை செய், அதை செய்ய வருபவர்களிடம் அமவுண்ட் கறந்து விடுவதாகவும் அதேபோல் கடை விவகாரத்திலும் பணம் விளையாடியுள்ளது எனவும் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Source - Asinanet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News