Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா தி.மு.க? சந்தேகம் கிளப்பும் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.!

தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா தி.மு.க? சந்தேகம் கிளப்பும் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.!

தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா தி.மு.க? சந்தேகம் கிளப்பும் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.!
X

Mohan RajBy : Mohan Raj

  |  13 Nov 2020 9:04 AM GMT

தி.மு.கவில் செயல்கள் அரசை எதிர்ப்பது மட்டுமின்றி தீவிரவாதத்தை ஆதரிப்பது போல் இருப்பதாக பல இடங்களில் பல அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டி காட்டி பேசியுள்ளனர். தி.மு.க'வும் அது போலத்தான் நாட்டின் பாதுகாப்பு விஷயத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் கூட தான் அரசியல் செய்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் அதனை எதிர்த்து தனது நிலைப்பாட்டை தீவிரவாத நிலைப்பாடு போல் மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும். இந்த நிலையில் தி.மு.க தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா என வெளிப்படையாகவே தமிழக பா.ஜ.க தலைவர் வெளிப்படையாகவே கேட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும் ஒரு பாடத்தை நீக்கியதற்கு ஏன் தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கிறது, தி.மு.க அரசியல் காரணத்திற்காக இதை செய்கிறது. தீவிரவாதத்தை தி.மு.க ஆதரிக்கிறதா ? என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது, "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "walking with comrades" என்ற புத்தகம் சார்ந்த பாடப்பகுதிகளை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க'வின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும் ஒரு பாடத்தை நீக்கியதற்கு தி.மு.க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளார்.

அருந்ததி ராய் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஆயுத போராட்டம் என்பது 2009'ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நடைபெற்றது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்தது. அப்போது அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க இப்போது எதிர்ப்பதேன்" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "அந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையிலேயே இந்திய துணை ராணுவப்படைகள் மத்திய இந்திய பகுதிகளில் அந்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு எதிரான ஆப்ரேஷனை செய்தனர்" என்றார்

"உண்மையான அக்கரை இருந்திருந்தால் தி.மு.க அப்போதே தடுத்திருக்கலாமே?" என எல்.முருகன் தி.மு.க'வின் முகமூடியை கிழிக்கும் அளவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News