Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளிக்கூட பாடம் கூட தெரியாதா? தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கொட்டு வைத்த பிரபல பத்திரிகையாளர்!

பள்ளிக்கூட பாடம் கூட தெரியாதா? தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கொட்டு வைத்த பிரபல பத்திரிகையாளர்!

பள்ளிக்கூட பாடம் கூட தெரியாதா? தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கொட்டு வைத்த பிரபல பத்திரிகையாளர்!

Saffron MomBy : Saffron Mom

  |  14 Feb 2021 7:47 AM GMT

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க எம்.பிக்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு பதிலடியாக வாங்கிக்கட்டி கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் தயாநிதி மாறன், பா.ஜ.க எம்பி தேஜஸ்வி சூர்யாவிடம், தடுப்பூசி விவகாரத்தில் டோஸ் வாங்கியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

பிறகு T.R. பாலு பிரதமரையும், இந்தியாவின் கொரானா தடுப்பூசி முயற்சிகளையும் பாராட்டி பேசிய உரை பின்னர் வைரல் ஆகியது. பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் 'Go back Modi' ட்ரெண்ட் செய்த தி.மு.கவினரின் மத்தியில் இது பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த வரிசையில் தற்போது தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் சேர்ந்துள்ளார். ஜம்மு & காஷ்மீர் மறு ஒருங்கிணைப்பு மசோதா மீதான விவாதங்கள் நடந்தது.


இம்மசோதா குறித்த விவாதத்தில் தி.மு.க எம்.பி சுமதி தமிழச்சி தங்கபாண்டியன் ஜம்மு காஷ்மீரில் இருந்து அரசியல் அமைப்பு பிரிவு 370 ரத்து செய்த போதும், அதன் மாநில அந்தஸ்தை நீக்கி யூனியன் பிரதேசமாக அறிவித்த போதும் எந்தவித பொது வாக்கெடுப்பும் ஏன் நடத்தப்படவில்லை? பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே ஏன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பினார்.


உண்மையில் இந்தியாவில் இத்தகைய பிரச்சினைகளுக்கு பொது வாக்கெடுப்பு என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. தி.மு.க எம்பிக்கு இது கூட தெரியவில்லை என்பது வேதனை.


இதை குறித்துப் பேசிய முன்னாள் ANI செய்திகள் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ் இது பள்ளிக் கூட பாட அறிவு, நமது எம்.பிக்கள் இத்தகைய அடிப்படை உண்மைகள் கூட இல்லாமல் பாராளுமன்றத்தில் பேசுவது வருத்தத்திற்குரிய விஷயம் என்று பேசினார். இது குறித்து பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் பொழுது தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க MP தயாநிதி மாறன் பேசினார். அப்போது, இந்தியாவின் கொரானா வைரஸ் தடுப்பூசிகளை ஏன் பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் வெளிப்படையாக முதலில் போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க கூடாது என்று பேசினார்.


அவர் கூறிய விஷயத்தில் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் இரண்டு. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தடுப்பூசிகளை கோரி வரும் வேளையில், இந்திய தடுப்பூசிகளை நமது முக்கியமான நான்கு தலைவர்கள் போட்டுக் கொண்டால் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை வரும் என்ற ரீதியில் பேசுகிறார்.


மற்றொன்று தடுப்பூசி முன்களப்பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும், பலவீனமானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு போட்டுக்கொள்வார்கள் என்று முன்பே அறிவிக்கப்பட்டது. இதைத்தாண்டி நாட்டின் தலைவர்கள் தங்கள் வரிசை மீறி தடுப்பூசியை பெற்றுக்கொள்வது முறையாக இருக்காது.


இந்திய தடுப்பூசிகளின் தரத்தை நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடும் வகையில் இதை நையாண்டியாக பேசியதற்கு பதில் தெரிவித்த பா.ஜ.கவை சேர்ந்த இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யா, "தி.மு.க எம்பி ஏன் அரசியல்வாதிகள் தடுப்பூசியை முதலில் போட்டுக் கொள்ளவில்லை என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார். நான் அதற்கு கேட்கிறேன், இது பழைய இந்தியாவாக இருந்திருந்தால் அவ்வாறு தான் நடந்திருக்கும். இது புது இந்தியா. இங்கே முன்கள பணியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று விதிமுறைகள் இருக்கும் பொழுது அப்படித்தான் பின்பற்றப்படும்.


இதுவே பழைய இந்தியாவாக இருந்திருந்தால் தயாநிதிமாறனின் தாத்தா, பாட்டி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் முதலில் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது புதிய இந்தியா. எனவே இங்கே தங்களுடைய முறையை மீறி அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட முறையில்முன்னுரிமையும் காட்டப்படாது" என்று தெளிவாக தெரிவித்தார். இது பலத்த ஆரவாரத்திற்கிடையே அங்கே வரவேற்கப்பட்டது. இந்த கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News