Kathir News
Begin typing your search above and press return to search.

18 ஆண்டாக கட்சியில் இருக்கேன், எனக்கு தகுதி இல்லையா? சோனியா மீது நடிகை நக்மா ஆவேசம்!

18 ஆண்டாக கட்சியில் இருக்கேன், எனக்கு தகுதி இல்லையா? சோனியா மீது நடிகை நக்மா ஆவேசம்!

ThangaveluBy : Thangavelu

  |  30 May 2022 8:36 AM GMT

நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ், மாநிலக்கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதே போன்று காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ''சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராஜீவ் சுக்லா, ரன்ஜீட் ரஞ்சன், ஹரியானா மாநிலத்தில் இருந்து அஜய் மக்கான், கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஜெய்ராம் ரமேஷ், மத்தியப் பிரதேசத்தில் இருந்து விவேக் தன்கா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இம்ரான் பிரதாப் கார்ஹி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி, தமிழகத்தில் இருந்து ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாதது பற்றி அதிருப்தியடைந்த மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், தனக்கு ஏன் மாநிலங்களவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியில் இணைந்தபோது, மாநிலங்களவை வாய்ப்பு வழங்கப்படும் என்று சோனியா காந்தி உறுதி அளித்திருந்தார். தற்போது கட்சியில் சேர்ந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் தேர்வான இம்ரானைவிட நான் எந்த விதத்தில் குறைச்சல். எனக்கு அப்போது தகுதி இல்லையா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். தற்போது இவரது ட்வீட் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: Nakkheeran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News