Kathir News
Begin typing your search above and press return to search.

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாக விநாயகர் சிலை விநியோகம் - களத்தில் இறங்கும் அமர் பிரசாத் ரெட்டி

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொந்த தொகுதி என கொளத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாக கொண்டாட பா.ஜ.க'வின் அமர் பிரசாத் ரெட்டி அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் வீடு வீடாக விநாயகர் சிலை விநியோகம் - களத்தில் இறங்கும் அமர் பிரசாத் ரெட்டி
X

Mohan RajBy : Mohan Raj

  |  31 Aug 2022 8:10 AM IST

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொந்த தொகுதி என கொளத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாக கொண்டாட பா.ஜ.க'வின் அமர் பிரசாத் ரெட்டி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் ஊடகத்திற்கு பேசிய பா.ஜ.க'வின் விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது, 'தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்துகளின் பண்டிகையை மட்டும் புறக்கணிக்கிறார், இது தவறு என்பது பலமுறை நாங்கள் சுட்டிக்காட்டி உள்ளோம் ஆனால் அதை கண்டு கொள்ளவில்லை.

அவர்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடவில்லை என்றாலும் அவர் தொகுதியில் உள்ள மக்கள் விநாயக சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அப்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களுக்கு நாங்கள் வீடு வீடாக விநாயகர் சிலைகளை கொடுக்கின்றோம்.

இந்த ஆண்டு 1008 விநாயகர் சிலைகளை கொடுக்க உள்ளோம் அதுமட்டுமின்றி தி.மு.க அரசு இந்து பண்டிகைகள் எவ்வாறு புறக்கணிக்கிறது என்பது குறித்து பேச உள்ளோம்' என்றார்.

தி.மு.க எப்படி தடுக்கிறது பார்ப்போம் என கூறியுள்ளார்.

Source - News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News