'நில அபகரிப்பு' புகழ் தி.மு.க நடத்தும் 'நாடக வீட்டுமனை பட்டா' போராட்டம்
'நில அபகரிப்பு' புகழ் தி.மு.க நடத்தும் 'நாடக வீட்டுமனை பட்டா' போராட்டம்
By : Mohan Raj
தி.மு.க'வின் வரலாறு எப்படி நினைவு கூறப்படுகிறதோ இல்லையோ கண்டிப்பாக 'நில அபகரிப்பு' என்றால் தி.மு.க மட்டுமே நினைவுக்கு வரும். அந்தளவிற்கு எளியோர் மட்டுமல்லாது மதிப்புள்ள நிலத்தை அனைவரிடமும் தி.மு.க நிர்வாகிகள் பிடுங்கி தங்கள் பெயரில் மாற்றி தங்களது ஆட்சிக்காலத்தில் அராஜகம் செய்து வந்ததால் பின்பு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட சட்டமே 'நில அபகரிப்பு' சட்டமாகும். ஒரு கட்சியின் அட்டூழியம் காரணமாகவே ஒரு சட்டம் இயற்றப்பட்டது என்றால் அது தி.மு.க'வின் அராஜக போக்கிற்கை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட 'நில அபகரிப்பு' சட்டமாகும்.
இப்படிப்பட்ட வரலாறு உடைய தி.மு.க கடந்த இரண்டு நாட்களாக ஒரு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அது ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்திய போராட்டம் தான் அது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கையின் படி தி.மு.க உடன்பிறப்புகள் "வீடுகள் இங்கே! பட்டா எங்கே" என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை புறநகர் பகுதியான சோழிங்க நல்லூர் தோகுதி, விருகம்பாக்கம் தொகுதி ஆகிய இடங்களில் தி.மு.க மாவட்டட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ'க்கள் "வீடுகள் இங்கே! பட்டா எங்கே" என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பயன்படாத நிலங்களில் குடியிருப்போருக்கு எப்படியும் 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாம்'கள் மூலமும். அல்லது சிறப்பு ஏற்பாட்டிலும் பட்டா வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
மாறாக கோவில் நிலம், மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஏரி, குளம், ஆற்றுப்படுகை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டுமே சுலபத்தில் பட்டா வழங்கப்படமாட்டாது. இப்படி இருப்பது ஐந்து முறை ஆட்சிக்கு வந்த தி.மு.க'வினருக்கு தெரியும். இருப்பினும் மக்களை ஏதாவது சொல்லை குழப்பி, மடைமாற்றி ஆட்சிக்கு வர துடிப்பது தி.மு.க'வின் செய்கைகளில் இருந்து தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அப்படி மக்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு போராடும் அளவிற்கு தி.மு.க'விற்கு கரிசனம் இருந்தார் ஏன் 'நில அபகரிப்பு' சட்டமே இயற்றும் அளவிற்கு மக்களிடம் நிலத்தை பிடுங்கினார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தி.மு.க'வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான 'முரசொலி' அலுவலகம் அமைந்திருக்கும்
இடத்தின் மூலப்பத்திரத்தையே காட்டாதவர்கள் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து பட்டா கேட்பது நகைப்புக்குரியது என மக்களே கருதுகின்றனர்.