திராவிடம், உதயசூரியன் எல்லாமே சமஸ்கிருதம், இவர்கள் தமிழ் என பேசுவதெல்லாம் போலி - தி.மு.க பற்றி சுப்பிரமணியன் சுவாமி
விராட் இந்துஸ்தான் சங்கமும் பாஜக ஆதரவாளர்களும் இணைந்து பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்தநாளை , மதுரையில்

By : Mohan Raj
விராட் இந்துஸ்தான் சங்கமும் பாஜக ஆதரவாளர்களும் இணைந்து பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்தநாளை , மதுரையில் விழாவாக எடுத்துக் கொண்டாடினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட சுப்ரமணியன் சுவாமி சிறப்புரையாற்றினார்.
நம் நாட்டின் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் அழித்தார்கள் அதிலிருந்து மீண்டு தற்போது தான் சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளோம். நாட்டில் இன்னும் சில ஆண்டுகளில் பெரிய மாற்றம் வரவிருக்கிறது.ஆங்கிலேயர்தான் திராவிடன் - ஆரியன் என்று பிரிவினையை உருவாக்கினார்கள், திராவித் என்பதுதான் திராவிடமானது திராவித் என்றால் முக்கடல்களும் சங்கமிக்கும் இடம் என பொருள்.
நான் கருணாநிதியிடம் ஒரு முறை பேசும் போது திராவிடம் என்பது சம்ஸ்கிருதம் என்றும், உங்கள் பெயரும் 40 சதவிகிதம் சம்ஸ்கிருதம் என அவரிடம் ஆதாரங்களுடன் விளக்கினேன், அதே போல உதயசூரியன் சின்னமும் சம்ஸ்கிருதம் என்று கூறியுள்ளேன். இதனால், எங்களுக்குள் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கருணாநிதி கொண்டு வந்த ராம் சேது திட்டத்தை நான் எதிர்த்த போது ராமர் யார்?' என்று கருணாநிதி என்னிடம் கேள்வி எழுப்பினார். மறுநாளே அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான் அப்போது அவரிடம் கெட் வெல் சூன், ராமர் யார் என்று இப்போது தெரிகிறதா?' என கேட்டேன் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும் போது அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மாற்று கட்சியாக இருக்கும் எனவும் திமுகவை சேர்ந்த ராஜூவ் காந்தி மோசமாக பேசி வருவதற்கு விரைவில் சிறை செல்வார் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழ் என பேசும் கருணாநிதி மகனுக்கு, `ஸ்டாலின்' என ரஷ்யன் பெயரை வைத்திருக்கிறார் என சாடியதோடு இந்தி கற்றகொள்ள விரும்புவர்களை ஏன் தடுக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
பெரியார் பற்றி அவர் கூறும் போது, பெரியார் இருந்திருந்தால் தி.மு.க-வே இருந்திருக்காது என தெரிவித்தார். பெரியார் என்ற ராமசாமி நாயக்கரிடம் ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில்கட்டிக் கொடுத்து, மகனை பாராமரிக்க உயில் எழுதி வைத்தார். அதன்படி, கோவிலை முறையாக பராமரித்ததற்கு 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றிருக்கிறார். இது திக தலைவர் வீரமணிக்கு தெரியுமா? எங்கே அவர் ஓடி போய்விட்டாரா?
கோயில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சட்டம் போட்டிருக்கிறார்கள்.ஆனால், உச்சநீதிமன்றம் கோவில்களில் அரசு அதிகாரம் செலுத்த கூடாது என தீர்பளித்துள்ளது. கோவில்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது உண்டியல் பணத்தை எடுக்கத் திட்டமிடுகிறார்கள் எனவும் தமிழ்நாட்டிலுள்ள 32 ஆயிரம் கோயில்கள் தி.மு.க அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை செய்ய உங்கள் ஆதரவு வேண்டும் என அவர் அந்த விழாவில் உரையாற்றினார்.
