Begin typing your search above and press return to search.
சசிகலா வருகை எதிரொலி.. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இன்று ஆலோசனை.!
சசிகலா வருகை எதிரொலி.. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இன்று ஆலோசனை.!

By :
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் பெங்களூருவில் தங்கியுள்ள நிலையில், வருகின்ற 8ம் தேதி தமிழகம் திரும்புகிறார். இதனிடையே சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவில் உள்ள சிலர் போஸ்டர் அடித்து வருகின்றனர். அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கட்சியை விட்டு அதிமுக தலைமை நீக்கியும் வருகிறது.
இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாள் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணியளவில் ஆலோசனை நடைபெறுகிறது. இதனால் அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Next Story