நீட் தேர்வு தீர்மானம் அயோக்கியதனம்.. தி.மு.க.வுக்கு ராசா பேசியதை ரிப்பீட் செய்த எடப்பாடி பழனிசாமி!
நீட் தேர்வு பயம் காரணமாக மேட்டூர் மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.
By : Thangavelu
நீட் தேர்வு பயம் காரணமாக மேட்டூர் மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை இன்று கூடிய நிலையில் இரண்டு காரணங்களை பேச முற்பட்டு வாய்ப்பு அளிக்காத பட்சத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, வாணியம்பாடியில் சமூக ஆர்வலரை சமூக விரோதிகள் கொலை செய்துள்ளனர். அந்த குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
அது மட்டுமின்றி இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் அவரது குடும்பத்தில் தகுதியான நபருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்தனர். ஆனால் இதுவரை நீட் தேர்வு ரத்தாகவில்லை. நீட் தேர்வு நடைபெறுமா இல்லையா என்பது குறித்து தற்போது மாணவர்கள் தேர்வை எழுதினர். அரசு தெளிவான முடிவை அறிவிக்காததே காரணம்.
மேலும், நீட் தேர்வு அச்சம் காரணமாக மேட்டூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் இறப்புக்கு முழு காரணம் திமுக அரசுதான். உச்சநீதிமன்றம் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று இறுதி தீர்ப்பு அளித்தது. இதனால் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக யாராவது செயல்பட முடியுமா?
கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக தீர்மானம் கொண்டுவந்த போது அது அயோக்கியத்தனம் என்று திமுக எம்.பி. ராசா கடுமையான வார்த்தைகளால் பேசினார். அவர் பேசிய ஆடியோவை செய்தியாளர்களிடம் போட்டு காண்பித்தது மட்டுமின்றி தற்போது திமுக கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு பொருந்துமா என்று கேள்வியும் எழுப்பினார்.
Source : Dinamalar
Image Courtesy:Social Media
https://www.dinamalar.com/news_detail.asp?id=2843581