முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகளிர் தினத்தில் வெளியிட்ட அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மகளிர் அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் மெர்ஷல் ஆயிருப்பார் என்று தோன்றுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இல்லதரசிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,500 மற்றும் வருடத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என கூறினார். அது மட்டுமின்றி இன்னும் ஏராளமான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் வெளிவரும் என கூறினார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் இல்லதரசிகளுக்கு ரூ.1000 கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், எங்களது திட்டத்தை அதிகாரிகள் மூலமாக எப்படியோ ஸ்டாலின் தெரிந்து கொண்டுதான் ரூ.1000 அளிக்கிறேன் என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஏமாற்றியது போன்று ஸ்டாலினால் ஏமாற்ற முடியாது என்று கூறினார்.
முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து திமுக கூட்டணி விரக்தியில் உள்ளது. மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.