Begin typing your search above and press return to search.
அ.தி.மு.க.,வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி.. செயற்குழு, பொதுக்குழு தீர்மானம்.!
அ.தி.மு.க.,வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி.. செயற்குழு, பொதுக்குழு தீர்மானம்.!
By : Kathir Webdesk
முதலமைச்சர் வேபாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாக அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த ஆண்டு அதிமுக அறிவித்தது. இதற்கு அக்கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர். ஆனால் கூட்டணி கட்சியினர் முறைப்படி எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள வில்லை.
இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக செயற்குழு, பொதுக்குழு அங்கிகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும், கூட்டணியை இறுதி செய்யும் பொறுப்பை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மேற்கொள்வார்கள் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Next Story