தேர்தலில் தில்லு முல்லு செய்து தி.மு.க. வெற்றி ! - ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்!
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தில்லு முல்லு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளதாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
By : Thangavelu
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தில்லு முல்லு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளதாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தேர்தலில் திமுக தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றுள்ளது என புகார் மனு அளித்தனர்.
புகார் அளித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: தமிழக ஆளுநரை சந்தித்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான புகார் மனுவை அளித்துள்ளோம். மேலும், மாவட்ட ஆட்சியர்களும் முறையாக பணி மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அதிமுக நாடியதாகவும், இந்த தேர்தல் இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் தேர்தலாக நடைப்பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற யுக்திகளை கையாண்டு வெற்றி பெற செய்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப் பெட்டியை எடுத்து சென்ற சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: News 18 Tamil