Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.வின் விடியா ஆட்சியில் சட்ட ஒழுங்கு குட்டி சுவராகிவிட்டது! சீறும் எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தி.மு.க.வின் விடியா ஆட்சியில் சட்ட ஒழுங்கு குட்டி சுவராகிவிட்டது! சீறும் எடப்பாடி பழனிசாமி!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 Oct 2021 2:55 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் விடியா ஆட்சிக்கு வந்து 5 மாத காலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள சம்பவம் உள்ளங்கையில் நெல்லிக்கனியாக உள்ளது. கடந்த 2011ம் ஆண்டியில் ஜெயலலிதா ஆட்சி ஏற்றபோது, தமிழகத்தில் வடமாநில கொள்ளையர்கள் மற்றும் தமிழக கிரிமினல்களின் அட்டகாசம் அதிகளவில் இருந்தது.

அப்போது காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்து, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி அப்போதைய முதலமைச்சர் ஜெயயலிதா உத்தரவிட்டதன் பேரில் குற்றவாளிகள் அடக்கி ஒடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன் காரணமாக சட்டம், ஒழுங்கு பேணி காக்கப்பட்டு தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்தது. ஜெயலலிதாவை தொடர்ந்து அதிமுக அரசும், இரும்புக்கரம் கொண்டு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக குற்றங்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டன.

மேலும், திமுக ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் சர்வ சாதாரணமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. விடியா ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த விடியா அரசின் இயலாமையை உணர்ந்து கொண்ட ஆளுநர் ரவி, டிஜிபியை அழைத்து வழங்கிய அறிவுரைக்குப் பின்னர் சுமார் 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவருகிறது.

இதில் மட்டும் 2 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1750 பேர் வரைக்கும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் 8 ஆயிரம் பேர் யார்? அவர்களின் நிலைமை என்ன? தற்போது எங்கு உள்ளார்கள்? என்று தெளிவாக கூறவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் பிறக்கும் என்று பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள், நாள்தோறும் விடிந்தால் என்ன சம்பவங்கள் தங்களை சுற்றி நடைபெறுமோ என்ற பயத்தில் உறைந்துள்ளனர். எனவே சட்டம், ஒழுங்கு சீரழியாமல் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதனை நினைவு படுத்துகிறேன். இதற்கு முதலமைச்சரின் கடமையும் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Admk Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News