தேர்தல் பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல்துறையிடம் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை.!
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கும் விதமாக பறக்கும் படையினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தை பொருத்தவரை, தேர்தல் சமயங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பல்வேறு நேரங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. அதே போன்று தமிழகத்தில் 146 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பரிசுபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 56 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் மற்றும் காவல் ஆணையர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.