தேர்தல் பணியில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்.! சத்ய பிரதா சாகு அறிவிப்பு.!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
By : Thangavelu
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில், பணியில் ஈடுபட்டிருந்தபோது, பறக்கும் படை வாகனம் விபத்திற்குள்ளானது. அதில் இருந்த துணைக் காவல் ஆய்வாளர் கர்ணன் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பணியில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.