வாக்காளர் விழிப்புணர்வு வாகனம்.. நெல்லை ஆட்சியர் துவக்கி வைப்பு.!
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
![வாக்காளர் விழிப்புணர்வு வாகனம்.. நெல்லை ஆட்சியர் துவக்கி வைப்பு.! வாக்காளர் விழிப்புணர்வு வாகனம்.. நெல்லை ஆட்சியர் துவக்கி வைப்பு.!](https://kathir.news/h-upload/2021/03/03/894211-whatsapp-image-2021-03-03-at-124946-pm.webp)
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான வே.விஷ்ணு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு அடங்கிய படக்காட்சி வாகனத்தை ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், துணை ஆட்சியர் பயிற்சி மகாலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகா கிருஷ்ணன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இந்த வாகனங்கள் மாவட்டம்தோறும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.