ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் உலகமே பேரழிவை சந்தித்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு நாடுகளை கட்டுப்பாடுகள் மற்றும தடைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு மாநில அரசுகள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் நமது நாட்டிலும் இரவு நேரக் கொண்டாடட்டம் இருக்காது என்றே தோன்றுகிறது.
இந்நிலையில், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்திக்குறிப்பில், வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், தமிழக அரசு பல துறைகளில் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், மலரும் இப்புத்தாண்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலர வாழ்த்துவதாக கூறியுள்ளார்.