Kathir News
Begin typing your search above and press return to search.

'கலைஞர் இருக்குற வரைக்கும் தான் தி.மு.க, இப்ப வேற' - போட்டு உடைத்த வி.பி.துரைசாமி

'கலைஞர் இருந்த வரைக்கும் நான் தான் அங்க நம்பர் ஒன் கலைஞர் மவராசன் போனாரு இருக்கிறவங்க எல்லாம் என்னை கால் தூசுக்கு சமமா நடத்த ஆரமிச்சுட்டாங்க' வி.பி.துரைசாமி வேதனையுடன் கூறியுள்ளார்.

கலைஞர் இருக்குற வரைக்கும் தான் தி.மு.க, இப்ப வேற - போட்டு உடைத்த வி.பி.துரைசாமி
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 July 2022 7:25 PM IST

'கலைஞர் இருந்த வரைக்கும் நான் தான் அங்க நம்பர் ஒன் கலைஞர் மவராசன் போனாரு இருக்கிறவங்க எல்லாம் என்னை கால் தூசுக்கு சமமா நடத்த ஆரமிச்சுட்டாங்க' வி.பி.துரைசாமி வேதனையுடன் கூறியுள்ளார்.

கடந்தாண்டு தி.மு.க'விலிருந்து பா.ஜ.க'விற்கு வந்து இணைந்தார் தி.மு.க'வின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி.

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு இந்நிலையில் பா.ஜ.க பட்டியலின அணி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய வி.பி.துரைசாமி கூறியதாவது, 'தி.மு.க'வில் சமூகநீதி பேச்சில் மட்டுமே உள்ளது, பட்டியல் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு என தி.மு.க'வில் பால்வளத்துறை, ஆதிராவிடர் நலத்துறை என ஒரு சில துறைகள் மட்டுமே வழங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார்கள்.

பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பட்டின மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்,

தி.மு.க'வில் நான் நிறைய பார்த்து உள்ளேன், கலைஞர் உயிருடன் இருக்கிற வரை அங்கு துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி நம்பர் ஒன் என்ற இடத்தில் தான் இருந்தேன் கலைஞர் மகாராசன் போன பிறகு மரியாதை போய்விட்டது, அவர் மறைவிற்குப் பின் கால் தூசுக்கு என்னை தள்ளி விட்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு பொக்கிஷமாக கிடைத்த தலைவர் அண்ணாமலை அவர்களை நாம் முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News