முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு !
கோவை, குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கூறி வந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
By : Thangavelu
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை, குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கூறி வந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சோதனையை முன்னிட்டு எஸ்.பி.வேலுமணி வீடு முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: Puthiyathalamurai
Image Courtesy:Indian Express
https://www.puthiyathalaimurai.com/newsview/112476/AIADMK-ex-minister-Velumani-and--including--17-people-have-filed-corruption-cases