Begin typing your search above and press return to search.
பரபரப்பு! தண்டவாளத்தில் சடலமாக கிடந்த கர்நாடக துணை சபாநாயகர்.!
பரபரப்பு! தண்டவாளத்தில் சடலமாக கிடந்த கர்நாடக துணை சபாநாயகர்.!

By :
கர்நாடக சட்டமேலவையின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவின் உடல் ரயில் தண்டாவளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டமேலவையின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவின் உடல் சிக்மகளூரு அருகேயுள்ள கடூரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது.
உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.எல்.தர்மேகவுடாவின் மரணம் கர்நாடக அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இவரது மரணத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Next Story