ரஜினி மக்கள் மன்றத்திற்கு மீண்டும் திரும்பிய ரஜினியின் தளபதி சத்தியநாராயணா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரஜினி மக்கள் மன்றத்திற்கு மீண்டும் திரும்பிய ரஜினியின் தளபதி சத்தியநாராயணா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
By : Mohan Raj
திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு தனது ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். "போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்" என தனது அரசியல் வருகை பற்றி அவர் ஏற்கனவே கூறியது போல் வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவதை போர் புரிவது போன்று பார்க்கிறார். அந்த காரணத்தாலேயே வரும் தேர்தலில் தனது கட்சியை பலப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகரும், அவரின் ரசிகர் மன்ற தூண் என அழைக்கப்படும் சத்திய நாராயணா என்பவரை மீண்டும் தனது மக்கள் மன்ற பணிகளுக்காக அழைத்துள்ளார். ரஜினி ரசிகர் மன்றத்தின் மாநில தலைவராக இருந்தவர் சத்தியநாராயணன்.
கடந்த 2010ம் வருடத்திற்கு முன்பு வரை ரசிகர் மன்றம் தொடர்பான அனைத்து பொறுப்புகளும் இவரிடமே இருந்தது. பிறகு சத்தியநாராயணனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனை அடுத்தே ரஜினியின் நண்பர் சுதாகர் ரசிகர் மன்ற நிர்வாகி ஆனார்.
ஆனால் மன்றத்தின் பழைய நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து அவருடன் தொடர்பில் தான் இருந்தனர். இதற்கு காரணம் சத்தியநாராயணனாவின் செயல்பாடுகள் தான் என்கிறார்கள். 1996 முதல் 2004 வரை ரசிகர் மன்றத்தை தி.மு.க, அ.தி.மு.க'விற்கு நிகரான ஒரு இயக்கமாக சத்தியநாராயணா வைத்திருந்தது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று ரஜினி வீட்டில் நடைபெற்ற முக்கிய ஆலோசனையில் சத்தியநாராயணா கலந்து கொண்டார். ரஜினியே சத்தியநாராயணாவுக்கு போன் போட்டு உடனே கிளம்பி வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளார்.
இதனால் மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டு போயஸ் கார்டன் வந்து சேர்ந்தார் சத்தியநாராயணா. இதனால் தான் துவங்க இருக்கும் கட்சிக்கு ரசிகர்களை ஒருங்கிணைப்பது மற்றும் கட்சி பணிகளை திராவிட கட்சிகளுக்கும் இணையாக வழிநடத்துவது போன்ற பணிகளை மின்னல் வேகத்தில் செய்ய சத்திய நாராயணா பெரும் உதவியாக இருப்பார் என திரு.ரஜினிகாந்த் அவர்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன் கட்சிக்கு பலம் சேர்ப்பதில் திரு.ரஜினிகாந்த் அவர்கள் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிடுவார் போலிருக்கிறதே என இப்பொழுதே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.