எதிர்க்கட்சியின் லாபத்திற்காக விவசாயிகள் போராட்டம்.. ஜி.கே.வாசன் கருத்து.!
எதிர்க்கட்சியின் லாபத்திற்காக விவசாயிகள் போராட்டம்.. ஜி.கே.வாசன் கருத்து.!
By : Kathir Webdesk
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகள் என்ற போர்வையில் அடியாட்களை கொண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கையை இந்த போராட்டம் கெடுக்கிறது என பல அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.
போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் அவர்கள் வரவில்லை. இதன் பின்னால் எதிர்கட்சியான காங்கிரஸ் செயல்படுகிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. நாளை மீண்டும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் போராட்டம் நடத்தப்படுகிறது. குறுகியகால நன்மையை கூறி விவசாயிகள் வருங்கால தொடர் வளர்ச்சி, வருமானத்தை திசை திருப்ப கூடாது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தால் அப்பாவி விவசாயிகள் பலியாகக்கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.