Kathir News
Begin typing your search above and press return to search.

தந்தை பாணியில் உதயநிதி.. தேர்தல் பரப்புரையில் உளறல்.!

தந்தை பாணியில் உதயநிதி.. தேர்தல் பரப்புரையில் உளறல்.!

தந்தை பாணியில் உதயநிதி.. தேர்தல் பரப்புரையில் உளறல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2020 1:07 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொது மேடையிலும், சரி பத்திரிகையாளர்கள் சந்திப்புகளிலும் உளறுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வரும். தற்போது அதே பாணியில் அவரது மகன் உதயநிதியும் இணைந்துள்ளார்.


திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி மேடைகளில் பேசும்போது திடீரென்று வாய்க்கு வந்ததை பேசுவார். இது மேடைகளில் உள்ள அவரது கட்சிக்காரர்களுக்கே பிடிக்காது. அதே போன்று கையில் துண்டு சீட்டு இல்லாமல் எந்த ஒரு மேடைகளிலும் ஏறமாட்டார். ஏன் என்றால் அவரால் எதுவும் பேசுவதற்கு தெரியாது என்றே சொல்லலாம். ஸ்டாலின் பேச்சு அடங்கி வீடியோக்களை அதிமுக, பாஜக ஐடி விங் மட்டுமின்றி பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.


இந்நிலையில், தற்போது ஸ்டாலின் பாணியில் அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியும் உளற ஆரம்பித்துள்ளார். 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டும் தற்போது இருந்தே தனது பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளார் உதயநிதி.


திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இரண்டு நாட்களாக போலீசாரின் தடைகளை மீறி அவர் பிரச்சாரம் செய்து வருகின்றார். ஏற்கனவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தற்போதுதான் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் உதயநிதி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது ஒரு மேடையில் பேசும்போது, இங்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும்போது ஒன்று மட்டும் நிச்சயம்; 2001ல் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். திமுக தலைவர் முதல்வர் ஆவார். அடுத்தாண்டு 2021 ஆனால் தேர்தலை 2001 தேர்தல் என உதயநிதி உளறியதை கேட்டு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது உதயநிதியின் உளறல் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News