Kathir News
Begin typing your search above and press return to search.

'ரேஷன் கடை தெரியுமா முதல்ல' - அயல்நாட்டில் படித்த பி. டி.ஆரை அசால்ட்டாக டீல் செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி

'மக்களும், முதல்வரும் திருப்தியா இருக்காங்க வேறு யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் இல்லை' என அமைச்சர் ஐ.பெரியசாமி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதில் அளித்துள்ளார்.

ரேஷன் கடை தெரியுமா முதல்ல - அயல்நாட்டில் படித்த பி.   டி.ஆரை அசால்ட்டாக டீல் செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Nov 2022 10:53 AM IST

'மக்களும், முதல்வரும் திருப்தியா இருக்காங்க வேறு யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் இல்லை' என அமைச்சர் ஐ.பெரியசாமி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டுறவு வாழவிழா நடந்த வரும் நிலையில் 'கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக கூட்டுறவுத் துறை சிறப்பாக உள்ளது, ஆனால் தினமும் கடத்தல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் எனக்கு திருப்தியாக இல்லை' என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்தார்.

இதற்க்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமி, 'ரேஷன் கடையே தெரியாதவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள், முதல்வரும் திருப்தியாக இருக்கிறார்' எனக் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், 'திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முறையாக சென்று சேருவதில் கூட்டுறவு துறை முதன்மை வகிக்கிறது. தற்பொழுது வரை 7,500 கோடி ரூபாய் விவசாய கடன், 900 கோடி ரூபாய் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக மத்திய அரசு பாராட்டி கேடயம் அறிவித்திருக்கிறது. குறைகள் எங்கே இருக்கின்றன என சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மேலும் பி.டி.ஆர் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, அவரை கேளுங்கள் என்ன நடந்தது, எங்கே தவறு நடந்தது என? அவர் திருப்தி அடையவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடைய வேண்டும் மக்கள் திருப்தி அடைய வேண்டும் வேறு யாரையும் திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை' என்றார்.

மேலும் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, பெருமைக்காக சுய லாபத்திற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை, பொது சேவைக்காக அரசியலுக்கு வந்தவர்கள்' எனவும் கூறினார்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News