Begin typing your search above and press return to search.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!
அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By :
அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் சுமார் 20 இடங்களிலும், சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது அதிமுக கட்சியினர் மத்தியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story