"கேரளாவை கேள்வி கேட்க சூடு, சொரணை இருக்கா அமைச்சர் துரைமுருகனுக்கு ? " - பொங்கி எழுந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!
கேரள அமைச்சர் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அனுமதியின்றி நீர் திறந்து விட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் மட்டுமின்றி விவசாயிகளிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகளிடம் கண்டனங்கள் எழுந்தது.
By : Thangavelu
கேரள அமைச்சர் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அனுமதியின்றி நீர் திறந்து விட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் மட்டுமின்றி விவசாயிகளிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகளிடம் கண்டனங்கள் எழுந்தது.
இதனால் வேறு வழியின்றி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் நான் 80 வயதிலும் அணையை வந்து பார்வையிட்டுள்ளேன் என்றார். மேலும், அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அணையை கண்டுக்கொள்ளவில்லை என்றார். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் எதுவுமே செய்யவில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கடும் கண்டனங்களை தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் பேசியதாவது: இன்றைக்கு கேரளா அரசை கண்டிக்க, வக்கில்ல, சொரணை இல்லை, ரோசம் இல்லை, நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனுக்கு 80 வயது ஆகிறது. காடு வாவா என்று சொல்கிறது... வீடு போ, போ என்ற நிலையிலும் கூட அவர் தன்னிலை மறந்து காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் வசைபாடியுள்ளார்.
நாங்க ஆட்சியில் இருக்கும்போது கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் இடுக்கி மாவட்டத்தில் அதிகமாக ஏற்பட்டது. அப்போது கூட முல்லைப் பெரியாறு அணை திறக்கப்படவில்லை. அப்போதும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அணையின் நீர் மட்டத்தின் உயரத்தை உயர்த்த கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போதைய அரசு கேரளா அரசை கண்டிக்ககூட துப்பில்லை. வக்கில்லை. எங்களை பற்றி திமுக பேச எந்த ஒரு அருகதையும் இல்லை. எங்கள் ஆட்சியின்போது அணை திறக்கப்படாமல் பாதுகாத்தோம். ஆனால் தற்போது 138 அடியிலேயே அணையை கேரள அமைச்சர் திறந்து விட்டுள்ளார். எனவே தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய தலைகுனிவு. இவ்வாறு அவர் கூறினார்.
Source: Vikatan Tv
Image Courtesy:Ndtv