அம்மா ஆட்சியிலேயே மீனவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்பட்டது.. தி.மு.க. ஆட்சியை விமர்சனம் செய்த ஜெயக்குமார்.!
தமிழகத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் மீனவர்களுக்கான நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நிவாரணத் தொகையாக 1.72 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதன் மூலம் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மீனவ மாவட்டங்களை சேர்ந்த 1,72,000 பயனாளிகள் பயடைவார்கள் என்று அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ''மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.500 ஐ புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2017ல் ரூ.5,000 என உயர்த்தி 1.63லட்ச மீனவ குடும்பங்களுக்கு வழங்கினார்கள்.#திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது ரூ.8,000 தற்போது கொடுப்பதாக இருப்பது ரூ.5,000/- மட்டுமே. ஓஹோ இதுதான் சொல்வதை தான் செய்வோம்! என்பதா? " என்று பதிவிட்டுள்ளார்.